நம்பிக்கையுடையவன், எதையும் எளிதில் முடிக்கும் திறமையுடையவன் - காந்திஜி
ஹோமங்கள் செய்வித்து வந்த நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுதி குவித்த இந்த 54 கோடி லிகித மந்திரங்களை, உலகநாடுகள், மற்றும் இந்திய மாநிலங்கள் வாரியாக கட்டுக்களாகக் கட்டப்பட்டு, கர்நாடக மாநிலத்தின் மக்களவை உறுப்பினராக இருந்த செல்வி லட்சுமி தாஸ் அவர்கள் தலைமையில் வாலாஜாவில் மந்திர கண்காட்சி நடைபெறச் செய்தார் சுவாமிகள்.
பின்னர் இந்த மந்திர கட்டுகளை எல்லாம் 12 [வேன்களில்] வாகனங்களில் ஏற்றி, வாலாஜாவில் ஊர்வலமாக வரச் செய்து ஸ்ரீ தன்வந்திரி பகவானின் ஆசியை அனைவரும் அடையும்படி செய்த பெருமை சுவாமிகளையேச் சேரும். லிகித மந்திர வாகனங்களுக்கு முன்னால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து வரவேற்று ஆரோக்கிய பீடத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் லிகித மந்திர கட்டுக்களை இறக்கி வைத்தனர். பாண்டிச்சேரி ஸ்ரீ தன்வந்திரி பகவான் பக்தர்கள் 60 பேர் 120 நாட்கள் தொடர்ந்து கட்டுக்களை வரிசைப்படுத்தினர். லிகித மந்திரங்கள் அடுக்கப்பட்டு, கட்டுக்கட்டாக செப்புத் தகட்டால் சுற்றப்பட்டு, அதன் மீது ஸ்ரீ தன்வந்திரி யந்திரம், ஹோமக்காசு, ஹோமபஸ்பம் ஆகியவை வைத்து மறுபடியும் கட்டப்பட்டது.
ஸ்ரீ தன்வந்திரி பகவான் ஊர்வலம் [கரிக்கோலம்] செல்லும் போது மிகவும் கவனத்தில் இருக்க வேண்டிய நினைவுகள்:
1. ஊர்வலமாகச் செல்லும் வண்டி இறுதி வரையில் பஞ்சர் ஆகக்கூடாது, 2. ஊர்வலமாக எடுத்துச் செல்லும் சிலைக்கு எந்த விதமான ஆபத்தும் ஏற்படக் கூடாது, 3, உடன் செல்லும் அர்ச்சகர்கள் நலமுடன் இருக்க வேண்டும் 4, அவர்கள் வீட்டில் உள்ளவர்களும் நலமாய் இருக்க வேண்டும். [ஏனெனில் அது அர்ச்சகர்களை பாதிக்கும்] 5, எவ்வித இடையூறும் இன்றி ஊர்வலம் செல்ல வேண்டும்.
இவ்வாறு எத்தனையோ துன்பங்கள் இருப்பினும், பகவான் ஊர்வலமாகச் செல்லுமிடங்கள் தோறும் புனித தீர்த்தம், புனித கற்கள் கொணர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற ஏற்பாடு செய்வார்.
ஸ்ரீ தன்வந்திரி பகவான் ஏறி ஊர்வலமாக வந்த வண்டி நல்லபடியாக வந்து சேர்ந்த பிறகு அடுத்தநாள் பஞ்சர் ஆகிவிட்டது. இதுதான் தெய்வமகிமை என்று கூறுகிறார்கள் போலும்.
"தனிமரம் தோப்பாகுமா?" என்று கூறுவார்கள். ஆகும் என்பதற்கு சுவாமிகளின் தனி முயற்சியே சான்றாகும். இராமருக்குக் கல்மட்டும் தான் ஊர்வலமாக வந்தது. சபரிமலை ஸ்ரீ ஐயப்பனுக்கு விக்கிரக ஊர்வலம் வந்தது. ஆனால் ஸ்ரீ தன்வந்திரி பகவான் சிலைதான் அதிக தூரம் வந்துள்ளது என்று பெருமையோடு மக்கள் கூறும் போது, அந்த பெருமை முரளிதர சுவாமிகளுக்கே உரியது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
ஸ்ரீ தன்வந்திரி சில அமைப்பு: எட்டு அடி உயரம். ஒரே கல்லால் செய்யப்பட்டது. சுமார் இரண்டு டன் எடையுள்ளது. பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில் அருள் புரிகின்றார். நான்கு திருக்கரங்கள். பகவானின் திருமார்பில் வலது பக்கம் தங்கத்தால் ஆன ஸ்ரீலட்சுமியின் உருவம் இருக்கிறது. சற்றுக் கீழே கஜலட்சுமி தேவி காட்சி தருகிறாள். வலது மேற்கரத்தில் சக்கரம். வலது கீழ்க்கரத்தில் அமிர்த கலசம். இடது மேற்கரத்தில் சங்கு. இடது கீழ்க்கரத்தில் சீந்தல் கொடி. வலது தொடையில் வெள்ளியால் செய்யப்பட்ட அட்டைப் பூச்சி. வெள்ளியால் ஆன ஸ்டெதஸ்கோப்பும், கைக்கடிகாரமும் வைத்து, கத்தியும் இடுப்பில் பெல்ட்மாகத் தலைமை அலோபதி மருத்துவாகத் தரிசனம் தருகிறார்.
[வளரும்]
|