'நாம் செல்லும் மார்க்கம் நல்லதாக இருந்தால் நம்முடைய இலக்கும் தானாகவே நல்லதாகிவிடும்' - காந்திஜி
ஸ்ரீ தன்வந்திரி பகவான் காண்பவர் காணும் விதம் தோற்றமளிப்பார். அவரைத் தூரத்திலிருந்து பார்த்தால் உப்பிலியப்பன் போன்று தோன்றுவார். அருகில் சென்று பார்த்தால் குருவாயூரப்பனாகக் காட்சியளிப்பார். வலது பக்கம் நின்று பார்த்தால் ராதாகிருஷ்ணன் போல் காட்சி தருவார். இடது கைப் பக்கம் நின்று பார்த்தால் பாண்டுரங்கனாகத் தோன்றுவார். மொத்தத்தில் முருகனாகவும், மகாவிஷ்ணு கோலத்தில் ஐந்து தலை நாகத்துடன் ஆதிசேஷனாக அருள் பாலிக்கிறார். பூமி பூஜை செய்தல்: மூன்று ஏக்கர் நிலம். அதுவும் பசுமை நிறைந்த நிலம். பத்தாயிரம் சதுர அடியில் விசேஷமான முறையில் கட்டிடக் கலையில் வல்லுனரான வள்ளுவர் கோட்டம் எழுப்பிய ஸ்ரீ கணபதி ஸ்தபதி (தற்சமயம் இவர் உயிருடன் இல்லை) அவர்களைக் கொண்டு பூமி பூஜை செய்தார். மந்திரங்கள் எழுதியவரில் ஒரு கோடிக்கு இரண்டு தம்பதிகள் என்ற முறையில் 54 கோடி மந்திரங்களுக்கு 108 தம்பதியர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள் பல மாநிலம், பல ஊர்கள், வெளிநாடுகளில் இருந்து வந்து, அவர்கள் கைகளால் செங்கல் வைத்து பூமி பூஜை செய்யப்பட்டது. அவர்களுக்கு வேண்டிய பலவகை வசதிகளையும் செய்து கொடுக்கப்பட்டது.
இரயில்வே இணை அமைச்சர் R. வேலு அவர்கள் முன்னிலையில் இந்த பூமி பூஜை நடந்தேறியது. இது தவிர 1,008 சுமங்கலிகள் செங்கல் பூஜை செய்ய காசி புனித நீரைக் கொண்டு அபிஷேகம் செய்தனர். இந்நிகழ்ச்சி வாலாஜாப்பேட்டை ஜே.பி. ராணி மகாலில் ரதசப்தமியன்று நடைபெற்றது. பிறகு இந்த கற்களைக் கொணர்ந்து 108 தம்பதிகள் கைகளால் எடுத்து வைக்கப்பட்டது.
சுவாமி அவர்கள் தன் உழைப்பினால் ஈட்டிய தொகையைக் கொண்டு நிலம் வாங்கினார். 54 ஹோமங்களுக்குப் பிறகுதான் நிலம் வாங்கும் பாக்கியம் ஏற்பட்டது. பூமி பூஜையில் சுவாமிகள், "இது ஒரு குபேர பூமி" என்று கூறினார். அந்த நேரத்தில் ஸ்ரீதன்வந்திரி பகவான் சிலைக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது. பிறகு சிறிது காலம் தண்ணீரில் சிலை வைக்கப்பட்டது. அதன் பிறகு சிறிது காலம் பாலிலும் அதன்பிறகு நெல்லிலும் சிலை வைக்கப்பட்டது. இதற்கிடையில் பேப்பரில் எழுதிய மந்திரத்திற்கு ஆயுள் உண்டா? பேப்ர் மக்கும் தன்மையுடையதே? ஸ்டெதஸ்கோப், கடிகாரம் போன்றவை எதற்கு? என்றெல்லாம் பரவலான ஐயங்கள் தோன்றலாயின.
இதற்கு சுவாமிகள் கூறிய பதில்:
பக்தனால் கண்டுபிடித்து, ஏற்றுக்கொள்ளப்பட்ட கடவுளுக்கு எப்படி வேண்டுமானாலும் அலங்காரம் செய்து பார்ப்பது பக்தனின் ஆசை. "எந்த கோயிலுக்குப் போனாய்? என்று கேட்டால், ஸ்டெதஸ்கோப் உள்ள கோயிலுக்குப் போனேன் என்றும், சாமி கையில் கடிகாரம் கட்டிய கோயிலுக்குப் போகலாம் என்றும் குழந்தைகள் முதல் சொல்லும் அரிய வாய்ப்பு ஏற்படுமல்லவா," என்றார் சுவாமிகள். ஸ்ரீதன்வந்திரி என்றால் மருத்துவர் என்பதையே போதிப்பது இந்த கோவில்.
(வளரும்)
|