திருப்பாவை

திருப்பாவை 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!*
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!*
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!*
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்*
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்*
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்*
நாராயணனே நமக்கே பறை தருவான்*
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.  

பொருள்:

இது மார்கழி மாதம், பௌர்ணமி நன்னாள். அழகிய ஆபரணங்களை அணிந்தவர்களே! சீர்மிக்கக் கோகுலத்தின் செல்வச் சிறுமிகளே! உலகோர் புகழும்படி நோன்பு செய்து நீராடுவோம், வாருங்கள். நந்தகோபனின் புதல்வனும், யசோதையின் சிங்கக்குட்டியும், மேகத்தை ஒத்த கருமேனி கொண்டவனும், செந்தாமரை மலர் போன்ற கண்கள் கொண்டவனும், சந்திரன் போன்ற முகம் கொண்டவனுமான ஸ்ரீமந்நாராயணன், நமது நோன்பிற்கான அருளைப் பொழிவான்.

More திருப்பாவை

 
More திருப்பாவை
 
 
 
Photo Gallery
 
Videos