திருப்பாவை

திருப்பாவை 21

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்!
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயில்எழாய்!
மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: பால் கறக்கும் போது கையில் ஏந்திய குடங்களில் பால் நிறைந்து பொங்கி வழியும். இருப்பினம் தொடர்ந்து பால் கொடுக்கும் வள்ளல் பசுக்களை பெற்றிருக்கின்ற நந்தபோபன் மகனே பள்ளி எழுந்தருள வேண்டும். வலிமை உடையவனே வேதங்கள் எல்லாம் அறிய முடியாதவனே, உலகத்தின் தோற்றக் காலத்தில் ஒளிவடிவம் எடுத்து நின்றவனே துயில் எழ வேண்டும்.

உன்னை எதிர்கொண்டு போர் செய்ய இயலாத உன் பகைவர்கள் உன் பாதங்களை வணங்குவது போல் நாங்களும் உன் பாதங்களை வணங்குவது போல் நாங்களும் உன் புகழ் பாட வந்துள்ளோம். தூக்கத்தில் இருந்து எழுந்து வருவாயாக

More திருப்பாவை

 
More திருப்பாவை
 
 
 
Photo Gallery
 
Videos