திருப்பாவை

திருப்பாவை 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்!
செப்ப முடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்;
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே துயிலெழாய்;
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மைநீ ராட்டேலோ ரெம்பாவாய்!

பொருள்: முப்பத்து மூன்று கோடி தேவர்களின் துன்பத்தையும் வருவதற்கு முன்பாகவே ஓடிச் சென்று போக்கும் கண்ணாபிரானே! இந்த காலைப் பொழுதில் உன்னை கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைய எழுந்தருள வேண்டும்.

நேர் வழியில் செல்வோனே? பகைவர்களுக்கு துன்பத்தைக் கொடுக்கும் தூய்மையானவளே துயில் நீங்கி எழுந்திரு, பொன்னால் செய்த கலசங்கள் போன்ற மார்பகம், சிவந்த உதடுகள், சிற்றிடை இவற்றை உடைய நப்பின்னையே! திருமகளே! துயில் எழுவாயாக. நாங்கள் நோன்பு நோற்பதற்கு தேவையான விசிறியும், கண்ணாடியும் உன் கணவனாகிய கண்ணனையும் வழங்கி எங்களை நீராட்டுவாயாக

More திருப்பாவை

 
More திருப்பாவை
 
 
 
Photo Gallery
 
Videos