திருப்பாவை

திருப்பாவை 23

மாரி முலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலேநீ பூவைப் பூவண்ணா!
உன் கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரியசிங்கா சனத்திருந்த யாம் வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.


பொருள்: மழைக்காலத்தில் வீரமுள்ள சிங்கம் வெளியே வராமல் குகைக்கு உள்ளேயே படுத்து உறங்கும். மழைக்காலம் முடிந்த பிறகு தீப்பொறி பறக்க தன் கண்களை திறக்கும். பிடரியில் உள்ள மயிர்கள் சிலிர்க்கும் படி நின்று கர்ஜனை செய்யும்.

குகையில் இருந்து வெளியே கிளம்பும் அந்த சிங்கத்தைப் போன்று காயாம்பூ போன்ற நிறமுடைய மணிவண்ணா. நீ உன்னுடைய கோவிலில் இருந்து இங்க வா. அழகிய அரியணைல் வந்து அமர்ந்து எங்களின் குறைகளை கேட்டு அருள்புரிய வேண்டும்.

More திருப்பாவை

 
More திருப்பாவை
 
 
 
Photo Gallery
 
Videos