திருப்பாவை

பன்னிரு ஆழ்வார்கள் - ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள்

 

பன்னிரு ஆழ்வார்கள் - ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் -8 (6)

 பாண்டிய தேசத்து ஸ்ரீ வில்லிப்புத்தூரில், பெரியாழ்வாரின் துளஸித்தோட்டத்தில், பூமாதேவியின் அவதாரமாய்; திருவாடிப்பூரத்தில், கோதையாய் அவதரித்து, ஸ்ரீ ரங்கநாதரையே மனதால் வரித்து, தினம் தினம் அணிந்து அழகு பார்த்து சூடிக்களைந்த மாலைகளையே ரங்கனுக்கு மாலையாக்கிய, கோதையே, கம்பீரமான குணங்களை உடைய ரங்கனுக்கு இனிய பத்தினியாய், ரங்கநாதருடன் ஐக்கியமாகி அவரையே ஆண்டவள் - ஆண்டாள்!

கலியுகத்தில் 97வது வருடத்தில், ஆடி மாதப் பூர நன்னாளில் மிகப்பெருமையுடைய ஸ்ரீவிஷ்ணு சித்தரின் பெண்ணாக, கோதாதேவி அவதரித்தார்.

ஆண்டாளின் 'ஞானபக்தி' அளவிட முடியாதது. பெரியாழ்வாரும், 'கோதைக்குகந்த மணாளன் கோயிற் பிள்ளையான நம்பேருமானே' என எண்ணினார். ஆனால் இது எப்படி நடக்குமென கவலைப்பட, திருவரங்கச் செல்வன், ஆழ்வார் கனவில் தோன்றி, ஆண்டாளைத் திருவரங்கம் அழைத்து வரப் பணித்தார்.

 அதன் படியே ஆண்டாளை ஆட்கொண்டார். 'ஒரு மகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த திருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால்தான் புகழால் கொண்டு போனான்' என்ற பெரியாழ்வாரின் பாடலுக்கு ஏற்பவே நடந்ததை, உண்மையானதை நினைத்து ஆச்சர்யப்பட்டார்.

 ராமனுஜர், ஆண்டாளின் சகோதரர் எனப்பட்டார். மாயனைக் கனவில் மணப்பதாக பாடிய இவரது 'திருப்பாவையைப்'; பாடாத, நாச்சியார் திருமொழியில் 'உள்ள வாரணமாயிரம்' பாடாத திருமணங்களே இல்லை.

 ஸ்ரீ ஆண்டாள் ரங்கனை மணந்தாலும், திருப்பாவைத் தனியன்கள் முழுவதும் பெருமாளுக்காகவே பாடி அருளியதால் இவரும் ஆழ்வாரானார்.          'இன்றும் இவரது எட்டாம் திருமொழியான 'விண்ணீல மேலாப்பு' என்ற 'தனியனை' மக்கள் யாவரும் சேர்ந்து அனுசந்தித்தால் (பாடினால்) 'மழை' வருவது திண்ணம்.

 ஆண்டாள் திருவடிகளே சரணம் !

 

 

' ஸ்ரீ ஆண்டாள் ஆழ்வார் '

(42-8-6)

 ஆண்டாள் காட்டியது உயர்ந்த சரணாகதி தத்துவம்-இறைவனிடம் சரணடைவதை தவிர சிறந்த வழியில்லை.

 பூமாதேவியே, ஆடிப்பூரத்தில் அவதரித்தாள் பொரியாழ்வார், 'கோதை' என பெயரிட்டு வளர்த்தார். 'கோதை'-எனில் நல்ல வாக்கு தருவபவள் என்று பொருள்.

 மாயவனைக் தனது அன்பால், காதலால் கட்டிப்போட்ட ஆண்டாள் இருவித மாலைகளைக் கட்டினாள்.

 'பாமாலை'யைப் பாடிச் சமர்ப்பித்தாள் 'பூமாலையைச்' சூடி தன் உள்ளத்தை அவனுக்கு உகந்தளித்தாள்.

 'ஆண்டாள்' என்றால் 'ஆள்பவள்' எனப் பொருள். ஸ்ரீரங்கனே அந்தப் பெயரை அவளுக்கு அளித்து தன்னில், தன் ஜோதியில் ஐக்கியமாக்கிக் கொண்டான் பரமனையே ஆண்டவள்.

 ஆண்டாளின் திருப்பாவையில் உள்ள 30 பாசுரங்களில் முதல் 10 பாசுரங்கள் திருமாலின் திருநாமங்களைக் கூறுகின்றன. அடுத்த பத்தில் திருமாலின் திருவடியை மலரிட்டு அர்ச்சிக்கவும், மூன்றாம் 10-ல் நம்மையே அந்த இறைவனுக்கு 'ஆத்ம சமர்ப்பணமாகத் தர வேண்டுமென்றும். கூறுகிறாள்.

 

 வேதம் படிப்பது கடினமானது, ஆண்டாளின்  பாசுரங்கள் வேதத்தின் சாறைப் பிழிந்து திருப்பாவை' யாக தொடுத்து நமக்கு மிக எளிதாக புரிய வைத்துள்ளாள்!

 ஆண்டாள் திருவடிகளே சரணம் !

 'ரேவதி'

More திருப்பாவை

 
More திருப்பாவை
 
 
 
Photo Gallery
 
Videos