|
திருவாரூர், பிப்ரவரி 03: கைது செய்யப்பட்ட திவாகரனின் ஜாமீன் மனுவை நீடாமங்கலம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கடந்த சில நாட்களாக போலீசாரால் தேடப்பட்டு வந்த சசிகலாவின் சகோதரர் திவாகரன் இன்று அதிகாலை திருச்சி அருகே அரியமங்கலம் என்னும் இடத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் 15 நாள் நீதிமன்றக் காவலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து நீடாமங்கலம் நீதிமன்றத்தில் திவாகரன் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
|