|
சென்னை, பிப்ரவரி 03: சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிப்படி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று தொகுதிப்படியை உயர்த்தும் சட்டமுன்வடிவை முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்தார். கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த தொகுதிப்படி உயர்வு அமலுக்கு வருகிறது.
மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் 10 ஆயிரத்தில் இருந்து 12 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் குடும்பத்துக்கான ஓய்வூதியமும் ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
|