தமிழ் News

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

சென்னை, ஜனவரி 27: மேட்டூர் அணையில் இருந்து சனிக்கிழமை முதல் தண்ணீர் திறந்து விட முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் தாலுகாவில் 750 ஹெக்டேர், திருவையாறு தாலுகாவில் 1,700 ஹெக்டேர் சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு பாசனத்துக்காக அடுத்த மாதம் (பிப்ரவரி) 5 ந் தேதி வரை தண்ணீர் தேவைப்படுகிறது என விவசாயிகளிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நாளொன்றுக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் நாளை (சனிக்கிழமை) மாலை முதல் 5.2.12 வரையில் மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

Jan 27, 2012
More News

Post Your Comments
Name*  
City  
Country  
Email*  
Comments*  
Security Code*
   
     
 
Comments
 
 
More தமிழ் News
 
 
 
Top Stories
 
Photo Gallery
 
Videos

Trailer of 'Nanban'

Guests at chennailivenews prize distribution ceremony