|
கூடங்குளம், பிப்ரவரி 22: தமிழக அரசின் நிபுணர் குழுவினர், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை சந்திக்க கோரி கூடங்குளம் போராட்ட குழுவினர் நடத்தி வரும் உண்ணாவிரதம் இன்று 2வது நாளாக தொடர்கிறது.
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் நிபுணர் குழுவினர், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை சந்திக்க போராட்ட குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 72 மணிநேர தொடர் உண்ணாவிரதம் தொடங்கி உள்ளனர். இன்று 2வது நாளாக உண்ணாவிரதம் நடக்கிறது. இதில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன், சிவசுப்பிரமணியன், முகிலன், ஜேசுராஜ் உள்பட கூடங்குளம், இடிந்தகரை, பெருமணல், கூத்தங்குளி, தொம்மையார்புரம், உவரி உள்பட கடற்கரையோர பகுதி கிராம மக்கள் கலந்து கொண்டனர். நாளை இரவு வரை உண்ணாவிரதம் நடக்கிறது. ஏற்கனவே கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
|