|
தூத்துக்குடி, பிப்ரவரி 22: சங்கரன்கோவில் இடைத்தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 12 கிராமங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் அடங்கியியுள்ள இந்த 12 கிராமங்களில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கவும், சட்டம்-ஒழுங்கை கண்காணிக்கவும், சிறப்பு மாஜிஸ்திரேட்டாக, கோவில்பட்டி தாலுகாவில் அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கும் திட்ட துணை தாசில்தார் முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், இப்பகுதியில் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக தொகுதி தேர்தல் அதிகாரிக்கும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமாருக்கும் தகவல் தருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|