|
திருவண்ணாமலை, பிப்ரவரி 03: சட்டமன்றத்தில் ஆளும்கட்சி, எதிர்கட்சி நாகரீகமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ராமதாஸ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "சட்டமன்றத்தில் ஆளும்கட்சி எதிர்கட்சி நாகரீகமாக நடந்துக்கொள்ள வேண்டும். சட்டமன்றத்தில் நாக்கை கடிப்பது, பல்லை கடிப்பது, கை நீட்டி பேசுவது என சினிமாவில் பேசுவது போன்று அநாகரிகமாக சட்டமன்றத்தில் நடந்துக்கொள்வது அநாகரீகமானது.
இதனை தகுதியில்லாதவர்க்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைத்துள்ளது என அந்தம்மா பேசியுள்ளார். அதில் நாங்கள் உடன் படுகிறோம், ஏற்றுக்கொள்கிறோம்.
சட்டமன்றத்தில் ஆளும்கட்சியை விட எதிர்கட்சிகளுக்கு அதிகம் பேச வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகம். இப்போது தான் வந்துள்ளார்கள். இனி அதிகம் எதிர்கட்சி உறுப்பினர்கள் பேச வாய்ப்பு தருவார்கள் என்று நம்புகிறோம். வாய்ப்பு தர வேண்டும்" என்று கூறினார்.
|