நிகழ்வுகள்

காஞ்சி மகா பெரியவர் - 2

திருவாரூர் வடகரையில் இருக்கும் தொழுதூர் பண்ணையாருடைய வீட்டில் பெரியவாளுக்கு பிக்ஷாவந்தனம் பண்ணிவைக்க ஏற்பாடு! பெரியவாளோ பக்கத்து க்ராமம் ஒன்றிலிருந்து பாதயாத்ரையாக வரும் வழியில், யாரும் எதிர்பாராமல், திடீரென்று ஓய்வு பெற்ற டாக்டர் T V கிருஷ்ணமூர்த்தி ஐயர் க்ருஹத்துக்குள் நுழைந்து விட்டார்! உள்ளே ஹாலில் அமர்ந்திருந்த டாக்டர், "தகதக" வென்று பேரொளியாக தன் முன் பெரியவா நிற்பதை கண்டு பதறி அடித்துக் கொண்டு எழுந்து ஓடி வந்து நமஸ்கரித்தார். அவருக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.

"அபச்சாரம் பண்ணிட்டேனே! பெரியவாளான ஒங்களை நான் வாசல்லேர்ந்து வரவேத்து உபசாரம் பண்ணணும்...அப்டி இருக்கறச்சே, பெரியவா அடியேனுக்காக வீடு தேடிண்டு வந்திருக்கேளே!"....என்று புலம்பினார்.

"அதெல்லாம் மிச்ச பேருக்குத்தான்.......நீயும் நானும் ஸ்கூல் மேட்ஸ்! அந்த மாதிரி சட்டதிட்டம்....லாம் நமக்குள்ள கெடையாது.......சரி, தொழுதூர் பண்ணையார் ஆத்துக்கு அவஸ்யம் வா" என்று அழைப்பும் விடுத்தார்.

"நீ ஏழைகளுக்கு இலவசமா வைத்யம் பண்ணிண்டு இருக்கியோன்னோ? அதுவே ஒனக்கு பெரிய பூஜை!" என்று சொல்லிவிட்டு தொழுதூர் நோக்கி கிளம்பினார். அந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஐயர் தன் கடைசி மூச்சுவரை ஏழைகளுக்கு இலவச வைத்யம், இலவச மருந்து, இவரிடம் மருந்து இல்லாவிட்டால் கடையில் வாங்கிக்கொள்ள பணம் என்று மட்டும் இல்லை, சாப்பாடு, பஸ் சார்ஜ் உட்பட கையில் குடுத்து அனுப்புவார். இருக்காதா? பெரியவாளுடைய ஸ்கூல்மேட் இல்லையா?

செய்யும் தொழிலே தெய்வம் என்பதை அவர் சத்யமாக கடைப்பிடித்து வந்ததால்தான், தெய்வமே அவரைத் தேடி வந்தது! 🙏

More நிகழ்வுகள்

 
More நிகழ்வுகள்
 
 
 
Photo Gallery
 
Videos