நிகழ்வுகள்

காஞ்சி மகா பெரியவர் -7

டாக்டர் மண்டன மிஸ்ரா தனது அனுபவங்களைக் கூறுகிறார்:
காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தங்க நகைகள் காணாமற் போய்விட்டன. அதைப் பற்றிச் சுவாமிகளிடம் கூறுவதற்கு நான் கர்நாடக மாநிலத்துக்குப் போயிருந்தேன்.
அங்கே குல்பர்க்கா என்ற இடத்தில் பழைய மண்டபம் ஒன்றில் பெரியவா தங்கியிருந்தார். அன்று சிவராத்திரி தினம். நாங்கள் உட்கார்ந்து சிறிது நேரம் பேசியதும் மஹா சுவாமிகள் சீடர் ஒருவரிடம், “ மூன்று பட்டு சால்வைகள் கொண்டு வா!” என்றார்.
அவர் திகைத்துப் போனார். அந்த வனாந்திரத்தில் சால்வைக்கு எங்கே போவது! எங்களுக்கும் ஒரே திகைப்பு. ஆனால் மஹா சுவாமிகளை மறுத்து யார் என்ன பேச முடியும்?
அந்த நேரத்தில் சுவாமிகளைத் தரிசிக்க வந்து இறங்கினார் ஒரு கனவான். அவர் கையோடு கொண்டு வந்திருந்த மூட்டையையும் காணிக்கையாக வைத்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். அந்த மூட்டையில் என்ன இருந்தது தெரியுமா? ஐம்பது பட்டுச் சால்வைகள்! ‘மஹா சுவாமிகள் நினைத்தால் நிறைவேறாமல் போகுமா?’ என்று எண்ணிக் கொண்டோம்.
காசி விஸ்வநாதர் ஆலயத்துக்குத் தங்கம் வேண்டும் என்ற கோரிக்கையை சுவாமிகளிடம் சமர்ப்பிக்க நினைத்தோம்; ஆனால் வாய்திறந்து பேசவில்லை. அப்படி தயங்கிக் கொண்டிருந்த போதே ஒரு பக்தர் தட்டில் தங்கக் காசுகளுடன் வந்து காணிக்கையாகக் கொடுத்து நமஸ்காரம் செய்தார்.
எங்களைப் பார்த்து ஒரு புன்னகையுடன் சொன்னார் மஹாசுவாமிகள் “இவை எல்லாமே காசி விஸ்வநாதர் ஆலயத்துக்குத்தான்!”
நாங்கள் கண்கலங்கி பேச மறந்து நின்றோம்!

More நிகழ்வுகள்

 
More நிகழ்வுகள்
 
 
 
Photo Gallery
 
Videos