கதை

மண்வாசனை

முருகேசன் வேப்பமரத்தின் கீழே கயித்துக்கட்டிலில் உட்கார்ந்து இருந்தார்.
முருகேசனுக்கு வரும் மார்கழி வந்தால் அறுவத்தி ஐந்து பூர்த்தியாகிறது, அப்பழுக்கில்லாத மனிதர். ஒரே மகன் கண்ணன், சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைச்செய்துக்கொண்டிருக்கிறான்.
பிறந்த மண் வாசனையும் பழகிய மனிதர்களையும் விட்டு பிரியமனமில்லாமல் ஆயிரம் முறை மகனும், மருமகளும் அழைத்தும் தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறார்.
அமைதியாக போய்க்கொண்டிருந்த அவரது வாழ்வில் புரோக்கர் தணிகாசலம் மூலமாகவும், மகன் கண்ணன் வேலைசெய்யும் கம்பெனி முதலாளி மூலமாகவும் வந்தது சோதனையும்... வேதனையும்....
கண்ணன் சென்னையில் மினரல் வாட்டர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறான். இபபோது பிரச்சனை என்னவென்றால் கண்ணனின் சொந்த ஊரில் புதிய நிறுவனம் ஒன்றை தொடங்க ஆசைப்பட்டார் அவனது முதலாளி.  அதற்காக தேவையான நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டார்.  பெரியவர் முருகேசன் வீடும், நிலமும் அவர்களுக்கு தேவைப்படுவதால் அதற்காக அவருடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஈடாக பெரிய தொகை ஒன்றை கொடுப்பதற்கும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் முருகேசன் எதற்கும் மசியவில்லை,  இப்போதும் அதுவிசயமாக பேசுவதற்குதான் புரோக்கர் தணிகாசலம் வந்திருக்கிறார்,
கயித்துகட்டிலில் பெரியவர் முருகேசன் அமர்ந்திருக்க, அவரது காலடியில் அமர்ந்திருந்த தணிகாசலம் மெல்ல பேச ஆரம்பித்தார்...
”இங்க பாருங்க ஐயா... இந்த ஏரியால ஒரு ஏக்கர் நிலம் அஞ்சு லட்சம்தான் போகுது... தம்பி வேலை பார்க்கற அந்த கோலா கம்பெனி உங்க அரை ஏக்கர் நிலத்துக்கு பதினஞ்சு லட்சம் வரை தரேங்கறாங்க... நீங்க ஏங்க இவ்வளவு பிடிவாதம் புடிக்கிறீங்க... தம்பி நீங்களாவது அப்பாவுக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க... வேணும்னா உங்க முதலாளிகிட்ட பேசி இன்னும் ஒரு அஞசு லட்சம் வாங்கிதர்றேன்... அப்பாவுக்கு கொஞ்சம் சொல்லி புரியவையுங்க... சுத்தி இருக்கிற எல்லாரும் நல்ல விலைககு விக்க ஒத்துக்கிட்டாங்க... இவரு மட்டும்தான் பிடிவாதமா இருக்காரு...” என்றார்.
”புரோக்கர் சார்... நான் அப்பாகிட்ட பேசிட்டு உங்களுக்கு ஒரு நல்ல சேதி சொல்லிவிடறேன்... நீங்க கௌம்புங்க...” என்று கண்ணன் சொல்ல....
”அப்ப நான் கௌம்பறேன் ஐயா....நான் வர்றேன் தம்பி...” என்று சொல்லிவிட்டு சென்றார் தணிகாசலம்.
முருகேசன் தன் வீட்டை ஒருமுறை உற்று பார்த்தார்.
அது ஒன்றும் பெரிய மாளிகை இல்லை... அது ஒரு ஓடு வேய்ந்த வீடு. வீட்டின் முன்புறம் இரண்டு பக்கமும் திண்ணை... வீட்டிற்கு வரும் அனைவரும் அந்த திண்ணையில் உட்கார்ந்துதான் ஊர்கதைகள் பேசுவது வழக்கம்... திண்ணையை தாண்டி உள்ளே சென்றால் இரண்டு விசாலமான அறைகள்... வீட்டுக்கு பின்புறம் பெரிய கிணறு... அதன் அருகில் காலி மனை...
இதுதான் முருகேசன் வீடு.
முருகேசனுக்கு அவரது அப்பா விட்டு சென்ற சொத்துதான் இந்த வீடும்... இந்த காலி மனையும்...
உடலில் தெம்பு இருந்தவரை தனது நிலத்தில் பாடுபட்டு உழைத்தார். அவரது பண்ணை கிணறு எந்த காலத்திலும் வற்றாது. தண்ணீரும் ரொம்ப சுவையாக இருக்கும்.  அந்த கிணற்றுக்காக பலரும் அவரது நிலத்தை விலைக்கு கேட்டார்கள். அவரும் அவரது மனைவி பார்வதி அம்மாளும் தங்களது ஒரே மகன் கண்ணன் நன்கு படித்து பெரிய வேலை பார்க்க வேண்டுமென்று ரொம்ப ஆசைப்பட்டார்கள். அதற்காக பல்வேறு சிரமங்களை அனுபவித்தனர். ஆனால் எந்த ஒரு சநத்ப்பத்திலும் தங்களது வீட்டையும் அதனை சுற்றி இருக்கும் நிலத்தையும் விற்க அவர்கள் நினைத்தது இல்லை.
காலசுழற்ச்சியில் பார்வதிம்மாள் மஞ்சள்காலை நோயால் மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்து போக தனிமரமானார் முருகேசன்,  பிள்ளையும் மருமகளும் பலமுறை அழைத்தும் தனது சொந்த ஊரை விட்டு போகமனமில்லாமல் தனந்தனியாகவே வாழ்ந்துவந்தார்.
மகனும், மருமகளும் மாதம் ஒருமுறை குழந்தைகளுடன் முருகேசனை வந்து பார்த்துவிட்டு செல்வார்கள். அந்த சமயங்களில் பேரன் பேத்திகளுடன் விளையாடி மகிழ்வார். இந்நிலையில் தான் கண்ணன் நிறுவனம் அவர்களது நிலத்தை நல்லவிலைக்கு கேட்பது புரோக்கர் தணிகாசலம் மூலம் கண்ணனுக்கு தெரிய வந்தது.
இதுப்பற்றி அப்பாவிடம் பேசுவதாக தணிகாசலத்திடம் கூறிய கண்ணன் இதுப்பற்றி அப்பாவிடம் பேசுவதற்காக கிராமத்திற்கு வார இறுதியில் வந்தான். அப்பா நிலத்தை விற்க சம்மத்தித்தால் சென்னையில் தான் வாங்கிய அப்பார்ட்மெண்ட்டின் பேங்க் லோனை திருப்பி கொடுத்துவிடலாம் என்ற மனக்கணக்கையும் போட்டான் கண்ணன். நிலம் கண்ணனின் தந்தைக்கு சொந்தமானது என்று கேள்விப்பட்ட அவனது முதலாளி கம்பெனிக்கு கொடுத்தால் பிரமோசன் மற்றும கணிசமான பணமும் கொடுப்பதாக வாக்கு கொடுக்க... கண்ணனுக்குள் ஆசைத் தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது,
எப்படியாவது அப்பாவை சமாதானம் செய்து நிலத்தை கம்பெனிக்கு விற்றுவிட வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு ஊருக்கு வந்தான் கண்ணன்,
பலமுறை சொல்லியும் அசைந்து கொடுக்கவில்லை பெரியவர் முருகேசன்.
”இது எங்கப்பா எனக்கா விட்டுட்டு போன வீடு... இந்த வீடு என்வாழ்க்கையோடு ஒட்டி இருக்கு... உங்க அம்மாவோட நான் நாற்பது வருசம் வாழ்ந்த வீடு. இதை என்னால் விற்க முடியாது... வித்துட்டு உன்கூட வரவும் முடியாது...” என்று உறுதியாக முருகேசன் கூற....
”நான் அந்த கம்பெனில வேலை பாக்கறதால... நீங்க இப்ப இந்த இடத்தை அவங்களுக்கு விக்கலேன்னா என்னோட வேலைக்கே உத்தரவாதம் இல்ல...” என்றான்.
”நான் சொன்னா சொன்னதுதான்... என் காலம் முடுஞ்ச பின்னாடி இதை நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்க...” என்று தீர்மானமாக சொன்னார் முருகேசன்.
எதுவும் பேசாமல் கண்ணன் சென்னை திரும்பினான்.
முதலாளியைப் பார்த்து, ”கொஞ்ச நாள் டைம் கொடுங்க சார்... அப்பா மனசை நிச்சயம் மாத்திடுவேன்... கண்டிப்பா நம்ப கம்பெனிக்கு முடிச்சிரலாம் சார்... ” என்று சொல்லி அப்போதைக்கு சமாளித்தான். முதலாளியும் கண்ணன் தன்னிடம் வேலை செய்வதால் எப்படியும் நிலத்தை சீக்கிரம் வாங்கிவிடலாம் என்று நினைத்தார்.
”இதனை நீ முடித்துக்கொடுத்தால் இன்னும் ஆறுமாதத்தில் உனக்கு கண்டிப்பா ப்ரோமோசனுக்கு ஏற்பாடு செய்கிறேன்” என்று வாக்கு கொடுக்க கண்ணனும் சந்தோசத்தில் மிதந்தான்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு...
தபால்காரர் சாமிநாதனிடமிருந்து கண்ணனுக்கு தொலைபேசி அழைப்பு...
”கண்ணணா? நான் தாபல்காரர் சாமிநாதன் பேசறேன்ப்பா... உங்க அப்பா நேத்து ராத்திரி துக்கத்திலேயே இறந்துட்டாருப்பா... நேற்றுகூட உன்னைப் பற்றித்தான் எங்கிட்ட பேசிக்கிட்டிருந்தார்... நல்ல மனுசன்.... நீ சீக்கிரம் வாப்பா.”
சேதி கேட்டதிலிருந்து கண்ணனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. ஒரு பக்கம் அப்பாவின் கடைசி நாளில் அவருடன் இருக்க முடியவில்லையே என்ற கவலை வந்துபோனாலும், ரெர்ம்ப நாளாக இழுத்துக்கொண்டிருந்த நிலப்பிரச்சனைக்கு ஒரு முடிவு வந்துவிட்டது என்ற சந்தோசமும் மனதில் தோன்றிட, குடும்பத்துடன் அப்பாவுக்கு இறுதி சடங்குகளை செய்ய ஊருக்கு கிளம்பினான் கண்ணன்.
ஒட்டு மொத்த கிராமமே தங்கள் வீட்டுக்கு முன்னால் திரண்டிருப்பதை கண்ட கண்ணன் ஆச்சர்யப்பட்டான்....
கண்ணனை கண்டவுடன் ஊர் மக்கள் அனைவரும் அவனிடம் விசாரிக்க கூடிவிட்டார்கள்.
வந்தவர்கள் அனைவரும் அப்பாவைப் பற்றியும்,  இந்த ஊர் மீதும், ஊர் மக்கள் மீதும் அவருக்கு இருந்த நேசத்தையும், பிடிப்பையும் கண்ணனிடம் மறக்காமல் பாராட்டத்தவறவில்லை.
அப்பா மீது இந்த ஊர் மக்களுக்கு இத்துனை அன்பா.... வியந்து போனான் கண்ணன்.
தன்னை மறந்து வீட்டுத்திணையில் ஊட்கார்நது இருந்த கண்ணனின் தோளில் ஆதரவாக கைகளைப் போட்டார் தபால்காரர் சாமிநாதன்.
”என்ன கண்ணா? ஏதோ யோசனையில் இருக்கிறாய்,” என்றவரிடம்
”ஒன்றுமில்லை மாமா... அப்பா மீது நம் ஊர் மக்களுக்கு இப்படி ஓர் அன்பா என்று நினைத்து, நினைத்து ஆச்சர்யப்படேறன்...” என்று சொன்ன கண்ணனைப் பார்த்து,
”கண்ணா அவர் உனக்கு வேண்டுமானால் அப்பாவாக இருக்கலாம்... ஆனால் இந்த ஊருக்கு அவ்ர் கடவுள் போலப்பா.....” என்றவரை ஒருவித ஆச்சர்யம் கலந்த பார்வையில் பார்க்க...
”ஏன்னப்பா இப்படி பார்க்கிற? தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்த தெய்வம் அப்பா உங்க அப்பா என்று சொல்ல,” இன்னும் ஆச்சர்யத்துடன் சாமிநாதனை ஊற்றுப்பார்த்தான் கண்ணன்.
”கண்ணா, முருகேசன் ஐயா இந்த ஊருக்கு செய்த பல நல்ல விசயங்களில் ஒன்றுதான் தண்ணீர் விசயமும்... உங்க வீட்டு கிணத்த பத்தி உனக்கு தெரியாதது இல்ல... நம்ம கிராமத்துல ஏற்கெனவே ஒரு மினரல் வாட்டர் கம்பெனி தொடங்கி நம்ப கிராமத்து நிலத்தடிநீரை பெரிய பெரிய போர்வால் போட்டு சுத்தமா ஊறிஞ்சி எடுத்துட்டாங்க... இதனால் நம்ம ஊர்ல மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காமல் ரொம்ப அவதிபட்டாங்க... ஊரெல்லாம் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடிய நேரத்திலும் உங்க வீட்டு கிணற்றில் மட்டும் தண்ணீர் வற்றாமல் இருந்தது இந்த ஊர் மக்கள் செய்த புண்ணியம்.. தண்ணீருக்கு தவித்த ஊர் மக்களை உங்க வீட்டு கிணற்று தண்ணீரை எடுத்துக் கொள்ளும்படி சொல்ல... ஊரே உங்க வீட்டு தண்ணீரைத்தான் குடிப்பதற்கும், அன்றாட வேலைகளுக்கும் பயன்படுத்திக்கிட்டு வாராங்க. ”
”’பணத்துக்காக தண்ணீரை விற்கின்ற இந்தக்காலத்தில் உங்க அப்பா ஊர் மக்கள் குடிக்க உங்க வீடடு கிணத்து தண்ணீரை எந்தவிதமான எதிர்ப்பார்ப்பும் இல்லாம கொடுத்திருக்காருன்னா அவரை நம்ம ஊரு மக்கள் தெய்வமா நினைக்காம வேற என்ன செய்வாங்க சொல்லு? ” என்றார் சாமிநாதன்.
சாமிநாதன் சென்று நீண்டநேரமாகியும் அப்பாவைப் பற்றிய அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றும் கண்ணன் காதில் கோயில் மணிபோல கணீரென்று ஒலித்துக் கொண்டிருந்தது.
காலம்தான் எத்தனை வேகமாய் ஓடுகிறது. பெரியவர் முருகேசன் இறந்து எல்லா காரியமும் முடிந்து சொந்தபந்தங்கள் எல்லாம் அவரவர் ஊருக்கு சென்று வீடு வெறிச்சோடி கிடந்தது.
அப்பாவின் ஈமக்காரியத்திற்காக வந்த கண்ணனுக்கும் இரண்டு வார விடுமுறை கழிந்து சென்னை திரும்பும் நேரமும் வந்தது.
அப்பாவும் அவரது சமூக அக்கறையுமே கண்ணனுக்கு வழியெல்லாம் சிந்தனையில் ஓடியது. அப்பா எவ்வளவு பெரிய மனிதர். பணம் ஒன்றே குறிக்கோளாக கொள்ளாமல் பிறருக்கு உதவும் அவரது குணத்திற்கு முன் அவரது மகன் என்று சொல்லிக்கொள்ளும் எனக்கு மட்டும் பணம், பதவி என்று எப்படி சுயநலமாக சிந்திக்க முடிகிறது? சீ, என்று தன்னுள் வெட்கி தலைகுனிந்தான் கண்ணன்.
நீண்டநாள் விடுமுறைக்கு பிறகு வேலைக்கு சென்றான் கண்ணன்.
கண்ணனைப் பார்த்ததும் அவனது முதலாளி அவனைத் தேடி வந்தார்.
”எல்லாம் கேள்விபட்டேன் கண்ணன். மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு. நல்ல மனுசன். உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியல்லை. இருந்தாலும் அப்பாவின் ஆசைகளையும். அபிலாசைகளையும் நீங்கள் தான் நிறைவேற்றி வைக்கணும். அதுதான் அவருக்கு நீங்க செய்யும் நன்றி கடன்...” என்ற முதலாளி தொடர்ந்து...
”நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும். இந்தாங்க உங்க பிரமோசன் ஆர்டர். இனி உங்க நிலத்தை எப்போ எங்களுக்கு பதிவு செய்யலாம்னு சொலுங்க,” என்ற முதலாளியிடம்,
”என்னை மன்னிச்சிடுங்க சார்.... எனக்கு இந்த பிரமோசன் வேண்டாம். நான் எங்க வீட்டையும் நிலத்தையும் விற்க போறதில்லை,” என்று கூறிவிட்டு முதலாளியின் கையில் பிரமோசன் ஆர்டரை திணித்துவிட்டு வேகமாக சென்றான்.
சட்டென்று மனசு இலேசானதுபோல ஒரு உணர்வு கண்ணனுக்கு.

More கதை

லக்ஷ்மி நரசிம்ஹன்

 
More கதை
 
 
 
Photo Gallery
 
Videos

Trailer of 'Nanban'

Guests at chennailivenews prize distribution ceremony