கட்டுரைகள்

போர் - 1

வீடுகளில் கணவன், மனைவி சண்டைகளை தயவு செய்து குழந்தைகள் முன் தவிர்க்கவும். பள்ளிகளிலும், விளையாடுமிடங்களிலும் குழந்தைகள் சண்டை, அண்டை, அயலாருடன் ஒத்துப் போவதில் சண்டை, கிராமங்களில் சாதிச் சண்டை, நகரங்களில் பலவிதக் கலவரங்கள்.
தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், வடநாடு, தென்னாடு  போன்ற மாநிலப் பிரிவினைச் சண்டைகள் நாட்டுக்கு நாடு ஒற்றுமை இன்மை, இன, மதக் கலவரங்கள். ஆக இந்த பேதங்கள் முற்றி போராக பரிணமிக்கிறது.
‘பரிணமித்தல்” என்பது, அழகை விகசித்து, போற்றி, உயர்த்திக் கூறும் ஓர் அழகிய பழமையான சொல். ஆனால், இங்கு நாகரீகம், கலாச்சாரம், வாழ்க்கையின் இனிமை, அழகு, அமைதி, நிம்மதி இவைகளைக் குலைக்கும் போரின் வன்முறையை, கேவலத்தை எழுத பூதக் கண்ணாடியின் மூலம் பல மடங்கு பெரிதாக்கி மக்களுக்கு உணர்த்த உபயோகப்படுத்தும் ஓர் சொல்.
ஆதி மனிதனுக்கும், தற்கால மனிதருக்கும் அதிக வித்யாசம் இருப்பதாகவே தெரியவில்லை!  ஒரே ஒரு வித்யாசம், பல தர, பல நிற உடைகள் மட்டுமே!
மன மாசற்ற ஏழை விவசாயி அழுக்கான மேலொன்று கீழ் ஒன்றென, இரு உடைகள் மட்டுமே அணிந்திருப்பர்.  அதைத் தான் மகாத்மா காந்தி பின்பற்றி, போர் தவிர்த்து, அகிம்சா முறையில் சுதந்திரம் பெற்று நமக்களித்தார்.
போரை தவிர்க்கலாம்.

More கட்டுரைகள்

ரேவதி

 
More கட்டுரைகள்
 
 
 
Photo Gallery
 
Videos

Trailer of 'Nanban'

Guests at chennailivenews prize distribution ceremony