திருப்பதி ஏழுமலையானிடம் விண்ணப்பங்கள்
ஆயிரமாயிரம் ஆண்டு காலமாக உறைந்திருக்கும் பெருமாளைக்காண ஆயிரம் கண் வேண்டும்! ஆயுளில் ஓர் முறை எனினும் அது அவரவர்கள் செய்த பூஜாபலனும், அதிர்ஷ்டமுமே! அப்பேர்ப்பட்ட ஐயனைக்காண குஞ்சும், குளுவானமாக, குழந்தைகளுடன், பஸ்ஸிலும், ரயிலிலும், இடிபட்டு, பசியும், பட்டினியுமாக மழை வெய்யில் பாராமல் பிரயாணம் செய்து வரும் மக்கள் எவ்வளவு பேர்! அவர்களால் அதிக பணம் தந்து சிறப்பு தரிசனங்கள் காண முடியாது. இலவச தரிசனம் தான்! மிக நீண்ட வரிசை! ஏற்கனவே பணம் கட்டி, ரிசர்வ் செய்தவர்களுக்கு - பதினைந்து அறைகள் உண்டு. ஒரு அறையில் 10 பென்ச் - ஒரு பென்ச்சிற்கு 5 பேர். ஆக 50 பேர். சுமார் அரை மணி முதல் 40 நிமிடங்களில் அடுத்த அறைக்கு போக (நெ.14) இரண்டு செக்யூரிட்டிகள், கதவை சிறிதே திறந்து வரிசையில் போக அனுமதி, மிக நல்ல ஏற்பாடு, அங்கும் சுத்தம் - பக்கத்திலேயே இரண்டு அறைகளுக்கிடையே டாய்லெட் (நாற்றமே இல்லை).
இதே போல், 1-ம் நெம்பர் அறை வரை சுமார் 3 மணி நேரங்களில் அனுப்பப்படுகிறோம்.
இதன் பின் தான் பிரச்சனையே. இந்த இடத்திலிருந்து. அப்பன் திருப்பதி மலையானை சேவிக்கும் வரை ஒரே இடி, சிறப்பு, (50, 100, 300) 10 இலவச தரிசன பக்தர்கள் என ஒரு ஒழுங்கில்லாத கூட்டம், ஒரே தள்ளல்.
இந்த இடத்திலும் சில போலீஸ் - செக்யூரிட்டிகள் என இரண்டு கயிறுகள் கட்டி வரிசையில் பக்தர்களை விட்டால் ஏழுமலையானை கண்ணார தரிசித்து மனதில் பதித்துக்கொள்ள வசதியாயிருக்கும்.
இலவச தரிசன பக்தர்களை பின்புறம் தள்ளுகிறவர்களும், முன்புறம், 'ஜருகண்டி' என கை பிடித்து இழுத்து தள்ளும் போலீசும்! பாவம் பக்தர்கள்! மிகவும் பரிதாபம்!
இந்த விஷயத்தை உடனே திருப்பதி தேவஸ்தானம் பரிசீலித்து – பக்தர்கள் பெருமாள் முன் நிற்க வேண்டாம் - ஆனால் 'பொன் வாயிற்' படியிலிருந்து, மனம் நிறையக் கண்டு கொண்டே திரும்ப ஒர் ஏற்பாடு. 'க்யூ' மிக, மிக, அவசியம், அவசரம்! பாவம் குழந்தைகளைத் தள்ளும் போது – கோவிந்தாவுக்கு பதில் 'ஐயோ' என கத்துகின்றனர்.
திருப்பதி மலையை அடைந்த உடனேயே மனதை ஒரு பக்தியும், அமைதியும், காதில் மணி ஓசையும், தெய்வீகமான பதிகங்களும் பாடல்களும் காதை நிறைக்கின்றன. கண்கள் ஏழுமலையையும் சுற்றி சுற்றி பார்க்கிறது. நாசியில் சுத்தமான நெய்யில் தயாராகும் லட்டு மணம், ஆனால் அந்த லட்டு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நாலு வீதிகளிலும் லட்டு கவுண்டர்கள் ஏற்படுத்தி விற்பனை செய்யலாமே? சொந்தங்களிடமும், நண்பர்களிடமும, திருப்பதி போவதாக சொன்ன உடனேயே லட்டு வாங்கி வாருங்கள் என்ற பின்னர்தான் தங்கள் காணிக்கையை உண்டியலில் சேர்க்கும்படி சொல்கின்றனர்.

ஒரிரு லட்டுவை உதிர்த்து துளித்துளியாக தரும்போது வருத்தமாக உள்ளது. நான்கு வீதியிலும் அல்லது கவுண்டர்களை அதிகரித்து பக்தர்களுக்கு லட்டு வாங்க வசதியை கட்டாயம் செய்து தர வேண்டும்.
என் அப்பா எழுமலையானே உன் புராணம், திருவிளையாடல்கள் அனைவருக்கும் தெரியும். கலியுக வரதா, கேட்டவர்க்கு கேட்டதை அருளும் தெய்வமே இந்த இரண்டு முக்கிய விண்ணப்பங்களையும் நிறைவேற்றி பக்தர்களைப் பரவசபடுத்தப்பா!
கோவிந்தா...கோ...விந்தா...
ரேவதி
| விளம்பரம் |
|

|
|
|
| படித்து விட்டீர்களா? ரேவதியின்
”நல்லதோர் வீனை செய்தே?" விறுவிறுப்பான குடும்ப நாவல்
இப்போது விற்பனையில்
|
|
|
|
|
 |
 |
| படித்து விட்டீர்களா? ரேவதியின்
”அக்கினிப் பூக்கள்" விறுவிறுப்பான குடும்ப நாவல்
இப்போது விற்பனையில்
|
படித்து விட்டீர்களா? ரேவதியின்
‘உறவும், உரிமையும்’ விறுவிறுப்பான குடும்ப நாவல்
இப்போது விற்பனையில்
|
படித்து விட்டீர்களா? ரேவதியின்
‘நல்ல மனம் வேண்டும்’ விறுவிறுப்பான குடும்ப நாவல்
இப்போது விற்பனையில்
|
|

|
|
 |
| படித்து விட்டீர்களா? ரேவதியின்
”பாலைவனச் சோலை" விறுவிறுப்பான குடும்ப நாவல்
இப்போது விற்பனையில்
|
படித்து விட்டீர்களா? ரேவதியின்
‘அதற்கொரு நேரம் வரும்’ விறுவிறுப்பான குடும்ப நாவல்
இப்போது விற்பனையில்
|
படித்து விட்டீர்களா? ரேவதியின்
‘தென்றல் வீசட்டும்’ ராணுவம், அதன் கட்டுப்பாடு பற்றி
இப்போது விற்பனையில்
|
|