கண்டபடி கிறுக்கி கவிதை என கூறி நண்பர்கள் அனைவரையும் நாதழுக்க வைத்தாலும் நாகரீகம் என்பதனால் நன்றாக இருப்பதாக நயம்படவே உரைத்தனரோ என்னுயீர் தோழர்
நன்றாக இருப்பதாக நான் நினைக்கும் என் கவிதை எதுகை மோனை எங்கே என ஏளனம் செய்தாரே இவனுக்கு எதுக்கு இந்த வேலை என்றெண்ணி எள்ளி நகைக்கத்தான் செய்தாரே என் குறை காண்போர்
அவரவர் சொல்லட்டும் ஆயிரம் கருத்துக்களை ஆயினும் கருத்தினில் அக்கறை உண்டடென்றால் அனைத்தையும் ஏற்றுக்கெர்ள்வேன் அன்புடனேயே மெத்த அன்புடனேயே!!
|