நண்பனே! யுவி நம்பிக்கை நட்சத்திரமே! கிரிக்கெட்டில் இந்தியாவின் எதிர்காலமே! வீரத்தின் விளைநிலம் பஞ்சாப் தந்த தங்கமே! எங்களின் உள்ளம் கவர்ந்த இளம் சிங்கமே!
கிங் கங்குலி தலைமையில் உன் பெயருக்கேற்றார் போல் இளவரசனாய் வலம் வந்த யுவராஜ்சிங்கே! நாட் வெஸ்ட் கோப்பையில் அதிரடியாய் விளையாடி புது நம்பிக்கை விதையினை விதைத்தவனே! அந்த நம்பிக்கை விதைகள்தானே இன்று இந்தியா அறுவடை செய்யும் கோப்பைகளானவே!
டெஸ்ட் அணியில் நிரந்திர இடம் பிடிக்க நீண்ட நாளாய் போராடும் உனக்கோ நீண்ட நெடிய சோதனைப் பயணம் ஆயினும் நம்பிக்கை இழக்காமல் விளையாடும் உன் மேல் நம்பிக்கை இழக்கவில்லை நாங்களும் தானே!
வாழ்க்கைக்காக போராடிய உனக்கோ வாழ்வதற்கே போராடும் நேரமிது! கோல்ஃப் பந்து அளவில் கட்டியாம் உன் உயிரை கொல்லப் பார்க்குதாம்! அளவில் பெரிய பந்தினையும் பார்த்தவன் நீ!! அயர்ந்து போகாமல் போராடுவாய் நீ!
உனக்கு பின்னால் நாங்கள் இருக்கிறோம் எங்கள் உள்ளத்தில் எல்லாம் நீதான் இருக்கிறாய் எங்களின் பிரார்த்தனை வீண் போகாது இந்தியாவின் நம்பிக்கை பாழாகாது!
|